Home » DISTRICT PRESS NEWS » கலப்பட தேயிலையில் டீ கலெக்டரிடம் புகார் மனு

கலப்பட தேயிலையில் டீ கலெக்டரிடம் புகார் மனு

கோவை, அக். 28:
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் சாக்ரடீஸ் மனு அளித்தார். இதில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள டீகடைகளில் பயன்படுத்தப்படும் தேயிலை தூள் மற்றும் காப்பித்தூள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல கடைகளில் காலாவதியான குளிர் பானங்கள், குடி நீர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை தவிர பிளாஸ்டிக் கப்புகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இது குறித்து மாநகராட்சி சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு பிளாஸ்டிக் மற்றும் கலப்படங்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment