அயோடின் உப்பு – விவாதங்களும் விளக்கங்களும் – அவள் விகடன்.

Aval Vikatan - Iodine Salt- Vivathangalum Vilakangalum.pdf-page-001

Aval Vikatan - Iodine Salt- Vivathangalum Vilakangalum.pdf-page-002

Aval Vikatan - Iodine Salt- Vivathangalum Vilakangalum.pdf-page-003

Aval Vikatan - Iodine Salt- Vivathangalum Vilakangalum.pdf-page-004

Advertisements

உணவு பாதுகாப்பு சட்ட குறைகளை களைய வணிகர்களை நேரில் அழைத்து பேசவேண்டும்

தர்மபுரி, :

உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களைய வணிகர் சங்கங்களை நேரில் அழைத்து பேச வேண்டும் என தமிழக முதல்வருக்கு தர்மபுரி நகர வணிகர் சங்கத்தினர் கோரி க்கை மனு அனுப்பி உள்ள னர். இது குறித்து தர்மபுரி நகர வர்த்தகர் சங்கத்தலைவர் உத்தண்டி, செயல £ளர் நாகராஜன், பொருளாளர் பாலன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு கோரி க்கை மனு அனுப்பி உள்ள னர். அதில் கூறியிருப்பதாவது:
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சட்டமாக இருந்தாலும் கூட, இதை அமல்படுத்துவது மாநில அரசின் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறு வணிகரும், சிறு தயாரிப்பாளர்களும் தொழிலை இழக்க நேரிடும்.
இதுதொடர்பாக பலமுறை புதுடெல்லி சென்று, 4.02.2014 வரை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு கால நீட்டிப்பு பெற்றுள்ளோம். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இச்சட்டத்தில் உள்ள குறை களை பல முறை எடுத்துக்கூறியும், அதில் எந்த திருத்தமும் செய்யவில்லை.
இந்த சட்டம் அமலுக்கு வர இருப்பதால், நிரந்தர மற்றும் தற்காலிக சிறு உணவு கடைகள், மெஸ் போன்ற சிற்றுண்டி விடுதி, சில்லரை வணிகர், மளிகை கடைகள், தேநீர் விடுதிகள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள், எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், ஓட்டல்கள், பேக்கரி, கேண்டீன்கள், உணவு சமைத்து பரிமாறுபவர்கள், பால் உற்பத்தியாளர்கள், பழங்கள் விற்பனை செய்பவர்கள், மாற்றுத்திறனாளி காப்பகங்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் உணவுபொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிலை இழக்க நேரிடும்.
எனவே, வணிகர் சங்கங்களை அழைத்து பேசி இச்சட்டத்திலுள்ள குறைகளை களைய வேண்டும். அதுவரை இச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

 

 

திருவாரூர் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு: ரூ. 5 ஆயிரம் காலாவதி குளிர்பானம் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

திருவாரூர்,

திருவாரூர் பகுதி கடைகளில் நடைபெற்ற திடீர் ஆய்வில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடைகளில்ஆய்வு

திருவாரூர் நகரில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து, திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பால்சாமி, எழில், அன்பழகன், மணழகன், விஜயகுமார், லோகநாதன், செல்வகுமார், குருசாமி, செந்தில்குமார் ஆகியோர் கடைகளுக்கு நேரடியாக சென்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் திருவாரூர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது குளிர்பானத்தின் தயாரிப்பு நிறுவனம், அதன் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் காலாவதியான குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

காலாவதியான குளிர்பானத்தை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். காலாவதியான குளிர்பானத்தை அருந்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். பொதுமக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு மிக அவசியம். குளிர்பானம் நிரப்பப்பட்ட பாட்டில்களை வாங்கி பயன்படுத்தும் போது, தயாரிப்பு தேதி, உபயோக காலம் குறித்த விவரங்களை படிப்பது அவசியம்.

ரூ.5 ஆயிரம்குளிர்பானம்பறிமுதல்

உணவு பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் பயன்படுத்தும் கால அளவுகள் மாறுபடும். உரிய காலத்தில் அந்த பொருட்களை பயன்படுத்தாவிட்டால், அதை அழிக்க வேண்டும். காலாவதியான தேதிகளுக்கு பின்னர் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ பயன்படுத்துவது உடலுக்கு தீங்கானது. தற்போது திருவாரூர் நகர் பகுதி கடைகளில் நடந்த ஆய்வில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் உரிய முறையில் அழிக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிவிக்க உணவு பாதுகாப்பு அலுவலகத்தை 04366–241034 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Take milk adulteration seriously, SC tells states

New Delhi, January 30

                                                      The Supreme Court today asked the states to give up their lenient attitude towards those responsible for adulteration of milk and milk products with hazardous synthetic substances as the issue involved the health of the entire population.

Lamenting that most of the states were prosecuting the offenders under laws merely meant for imposition of penalties, a Bench comprising Justices KS Radhakrishnan and Vikramajit Sen wanted to know as to why they were reluctant to enact tougher laws providing for life term for the offenders on the lines of the provisions in West Bengal and Orissa.

The Bench noted that though UP also had a law for awarding life sentence, no accused had been booked under this provision so far.

The court rejected the affidavits filed by Punjab, Haryana, UP and other states, observing that they had not given adequate details on the nature of substances used for adulterating milk, method of prosecution and number of convictions.

It directed all states to file detailed affidavits within three weeks, covering all aspects of adulteration, the number of samples collected during raids, cases initiated and percentage of conviction.

Punjab’s AAG Ajay Bansal said 3,369 samples were tested in the state in three years (2011-13), of which 785 samples were found to be “sub-standard or adulterated.”

However, only 18 samples contained synthetic substances. There were 24 convictions, while 184 quintals of milk products and 1,700-litre milk was destroyed on account of adulteration.

Haryana’s ASG said 2,398 samples were tested during 2009-13, of which 676 were sub-standard. None of the samples collected in 2009-12 had harmful chemicals. In 2013, one sample had harmful substances. There were 752 prosecutions, of which 58 resulted in conviction, while trial was on in 487 cases.

Appearing for the Delhi Government, ASG Mohan Jain said none of the samples collected from Mother Dairy failed the quality test.

Be strict with offenders

  • The SC said most states were prosecuting offenders under laws meant for imposition of penalties
  • It wanted to know why states were reluctant to enacting tougher laws that includes sentencing offenders to life term

 

Food Safety License’ Must for Food Business Operators

                                                                                         As per a recently passed directive by Food Safety and Standards Authority of India (FSSAI), all those in food business, including road side canteens and hotels, have to obtain a license/registration under the Food Safety and Standards Act 2006, before February 4.
Operators running operations post 4th Feb without license would be levied a penalty upto Rs. 5 lacs and/or imprisonment upto 6 month.
The directive,first passed in month of November 2013, declares that all Food Manufactures, Packers, Wholesalers, Distributors & Sellers, Hotels, Restaurants, Clubs, Canteens and Caterers must have food safety license.
The prime objective of the directive is ensuring that the food items served are hygienic, wholesome and free of contaminants.
According Kailash Sharma, President, Hotel Association Udaipur, around 450 members of the association operating across various hotels in Udaipur have already applied for license.Besides the hotels, the association also has 60 restaurants as members, all of whom have also duly applied for license.
For those who are yet to apply for license, last date of getting the license is 4th February.The form is available for download on FSSAI’s website.

ஓட்டலில் வாங்கிய குளிர்பான பாட்டிலில் புழுக்கள்: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

                                                                                                  ஓட்டலில் வாங்கிய குளிர்பானத்தில் புழு நெளிந்ததால் மாநகராட்சி அதிகாரிகளிடம் சமூக சேவகி புகார் செய்தார். உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி காலாவதியான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குளிர்பான பாட்டிலில் புழு கிடந்தது பற்றி அதை வாங்கிய ‘எக்ஸ்னோரா’ நிறுவனத்தின் பொதுச் செயலாளர் நிஷா கோட்டா கூறியதாவது:
மெரினா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் ஒரு ஓட்டல் உள்ளது. ராணி மேரி கல்லூரி நிகழ்ச்சிக்கு குழு உறுப்பினர்களுடன் வந்திருந்த நான், குளிர்பானம் குடிக்க அந்த ஓட்டலுக்கு சென்றேன். ரூ.15 கொடுத்து குளிர்பானம் வாங்கினேன். பாட்டிலுக்குள் ஏதோ நெளிவதுபோல இருந்தது. அருகே கண்ணை வைத்துப் பார்த்தேன். பாட்டிலுக்குள் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன.
அதிர்ச்சி அடைந்து கடைக்காரரிடம் கேட்டேன். ‘நாங்கள் வாங்கி விற்பதோடு சரி. குளிர்பான ஏஜென்ட்தான் இதற்கு பொறுப்பு. அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று கூறி, குளிர்பான ஏஜென்ட் சுரேஷ் என்பவரின் டெலிபோன் எண்ணைக் கொடுத்தார். அவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அவரோ, “பாட்டில் குளிர்பானங்கள் எல்லாமே இப்படித்தான் இருக்கும். நாங்கள் ஒவ்வொரு பாட்டிலாகப் பார்த்தா வியாபாரம் செய்ய முடியும். உங்களை யார் வாங்கி குடிக்க சொன்னது” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.
உடனடியாக சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் குகானந் தத்தை தொடர்புகொண்டு, நடந்த விவரங்களை கூறினேன். அடுத்த சில நிமிடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்தனர். கடையில் சோதனை நடத்தி, காலாவதியான குளிர்பான பாட்டில்களை கைப்பற்றிச் சென்றனர்.
குளிர்பான பாட்டிலை வாங்கிய போதே, மூடி துருப்பிடித்து இருப்பதைப் பார்த்து கடைக்காரரிடம் கேட்டேன். ‘கடல் காற்றில் எல்லா குளிர்பான மூடிகளும் ஒரே மாதத்தில் துருப்பிடித்து விடும்’ என்று சர்வசாதாரணமாக கூறுகிறார். மூடியைத் திறக்கும் போது துரு உள்ளே விழுந்தால், அருந்துபவர்களுக்கு வயிற்று வலி உள்பட பல உபாதைகள் ஏற்படும். பொது மக்களின் உடல்நலத்தில் வியாபாரிகளுக்கும் பொறுப்பிருக்கிறது. அவர்கள் லாபத்தை மட்டுமே நினைக்க கூடாது. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும். இவ்வாறு நிஷா கூறினார்.
நீங்களும் புகார் செய்யலாம்
உணவுப் பொருட்கள் தரம் குறைந்திருந்தாலோ, கெட்டுப் போயிருந்தாலோ, பூச்சிகள், குப்பைகள் அல்லது வேறு ஏதா வது கிடந்தாலோ 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறையினரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.