குன்னூரில், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை – DailyThanthi Press News

நாள் : Jun 29 | 12:48 am

குன்னூர்,

குன்னூரில், நேற்று நடைபெற்ற சோதனையில் ரூ.5 ஆயிரம் மதிப்பு உள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புகையிலைபொருட்கள்விற்கதடை

தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற  புகையிலை பொருட்களை விற்க தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா தடை விதித்து உள்ளார். இதனையும் மீறி ஒரு சில கடைகளில் ரகசியமாக மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இது மட்டுமின்றி நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக இருப்பதால் போலி குளிர்பானங்கள்,காலாவதியான உணவு பொருட்கள், சாயம் கலந்த தேயிலை தூள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையில் அலுவலர்கள் செல்வராஜ், சிவக்குமார், சிவராஜ், ஆதி கோபாலகிருஷ்ணன், அருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் குன்னூர் மார்க்கெட் பகுதி, பஸ் நிலையம் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பான் மசாலா, குட்கா  போன்ற புகையிலை பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது.

காலாவதியான   பொருட்கள்பறிமுதல்

இதனை தொடர்ந்து குளிர் பானங்கள் விற்கும் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காலாவதியான பிஸ்கெட், மிட்டாய், ரொட்டி போன்ற வற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி கூறியதாவது:–

தமிழகத்தில் புகையிலை பொருட்களை விற்க தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்த நிலை யில், குன்னூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் போலி குளிர் பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

சட்டரீதியானநடவடிக்கை

அடுத்த முறை சோதனை செய்யும்பொழுது இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள், போலி குளிர் பானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள், போலி குளிர் பானங்கள் விற்பனை செய்வதை பொதுமக்கள் அறிந்தால் உணவு பாதுகாப்பு அலுவலக தொலைபேசி 0423–2450088 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

உணவு பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கம் தீர்மானம் – DailyThanthi Press News

நாள் : Jun 29 | 06:43 pm

நெல்லை

உணவு பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுகூட்டம்

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுனில் நடந்தது. சங்க தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிப்பிள்ளை, செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துணை செயலாளர் கான்முகமது வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

விலைவாசி உயர்வு மற்றும் அன்னிய நாட்டு ஆதிக்கம் ஆகியவற்றில் இருந்து இந்திய மக்களை பாதுகாக்க உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.

உணவுபாதுகாப்புசட்டம்

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம், சில்லறை வணிகத்தை முற்றிலும் ஒழித்து விடும். நடைமுறைக்கு ஒத்துவராத வழிமுறைகளை கொண்டு உள்ள இந்த சட்டதைத மறுபரிசீலனை செய்து, திரும்ப பெற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்களை தடுத்து நிறுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் பரவாத வகையில் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுகள் வழங்கப்பட்டன. ராமையன்பட்டி யூசுமியா அனாதை நிலையத்துக்கு அரிசி, உதவிதொகையும் வழங்கப்பட்டது.

ஆண்டுவிழா

இதை தொடர்ந்து சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மேயர் விஜிலா சத்தியானந்த், நெல்லை மண்டல தலைவர் மோகன், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன், பல்வேறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, முருகேசன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஆவின் பால் விற்பனை மையங்களில் திடீர் சோதனை – Dinamalar Press news

நாள் : ஜூன் 30,2013,06:23 IST

தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி நகரில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் காலாவதியான பால்பாக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் தனி தாசில்தார்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி நகர் பகுதிகளில் ஆவின் பால்வழங்கும் நிலையங்களில் திடீர்
சோதனை மேற்கொண்டனர்.

சிதம்பரம்நகர் ,டபிள்யூஜிசிரோடு, புதுக்கிராமம் உட்பட பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு சில கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் விலைக்கு விற்ற ஆவின் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விற்பனை தேதி முடிந்து காலாவதியான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. வருங்காலத்தில் இதுபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திடீர் சோதனை செய்யப்படும் என்றும் அப்போது கூடுதல் விலைக்கும், காலாவதியான பால்பாக்கெட்டுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கலெக்டர் அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்

FDA to launch drive to check food quality in city hotels – The Times Of India

TNN | Jun 26, 2013, 12.54 AM IST

NASHIK:

The Food and Drug Administration (FDA) plans to launch a drive from next week to inspect hotels and eateries across the city to monitor food quality. There are around 3,000 hotels and eateries across the city.

The drive will be conducted in view of the Kumbh Mela scheduled in 2015-16. Around one crore people are expected to visit Nashik during the Kumbh.

Chandrakant Pawar, joint commissioner (food), FDA, said: “Lakhs of devotees come to Nashik for the Kumbh Mela. Public health will be a priority for us during the Kumbh. We are, therefore, planning to launch a special drive to inspect the hotels and eateries from the first week of July.”

“The major objective behind the drive is to check whether the food is cooked in hygienic conditions. We will serve improvement notices to hoteliers where the food is found to be unhygienic. We will take action against hoteliers or owners of eateries if improvement is not seen even after issuance of notices.”

Gutka freely available in Mysore district – The Times Of India

TNN | Jun 29, 2013, 06.03 AM IST

MYSORE:

The state government’s ban on gutka has had little impact here. After officials raided some shops in the city centre selling gutka in bulk, there’s been no follow-up action for a week and sellers are charging exorbitantly for the banned item. Interestingly, petty shops in CM Siddaramaiah’s home town continue to sell gutka.

The first raid was conducted on June 5 when district surveillance officers seized a vehicle and gutka worth Rs 50,000 at Santhepete and Shivarampete from wholesale traders. It was followed by a raid at a petty shop in Bandipalya, where officials seized small quantity of banned products.

After which concerned officials have not taken any drives across city as well as in rural areas. When TOI visited some of the petty shops in the city, it was found that they were selling gutka products.

A shopkeeper, who didn’t want to be named, said they get the products from North Karnataka and from states which haven’t banned gutka. While another shopkeeper mentioned he’s selling products at a higher rate, sometimes ten times the original price. The product is not on display though. Sudheer, a private firm employee from Bangalore who is Mysore on vacation, said it was easy for him find his favourite brand of gutka at a petty shop, although he had to cough up extra money for it.

The district surveillance officer, MCC health officer (in-charge) Dr DG Nagaraj said some shop continued to sell gutka despite the ban. He said health officers are conducting raids across the district. “I’ve instructed all the officers to make sure no banned products are sold in the district,” he said.

When asked about some petty shops still selling products despite the ban, he said there are no manufacturing units in Mysore and the banned items are coming from other districts as well neighbouring states. “We’ll soon send an official order to such shops and the guilty will be fined under the provisions of Food and Safety Standards Act”, he said.

Food safety officials had no authority to order the closure of food establishments – The Hindu

June, 28, 2013:

Friday :

Raids on hotels and food outlets is merely an excuse to harass small-time businessmen, the Kerala Vyapari Vyavasayi Ekopana Samithi (KVVES) said on Thursday. It was responding to a series of State-wide raids conducted by food safety officials. In a release, the traders’ body said these raids were unfair on the small trader and amounted to effectively crippling his business. It said food safety officials had no authority to order the closure of and charge cases against food establishments, as it came only under the power of the Revenue Divisional Officer.