பொள்ளாச்சி மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு திடீர் வாந்தி–மயக்கம்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதியில் நேற்று காலை உணவு சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது.

மாணவர்விடுதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் அரசு ஆதி திராவிட நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். விடுதி காப்பாளராக நெல்லையை சேர்ந்த சிங்கபாண்டி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

23 மாணவர்களுக்குவாந்திமயக்கம்

இந்தநிலையில் நேற்று காலை உணவாக மாணவர்களுக்கு சாப்பாட்டுடன் சாம்பார், ரசம் வழங்கப்பட்டது. மாணவர்கள் உணவை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 23 மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மாணவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள். மாணவர்கள் மருதமுத்து, அரவிந்த், ராஜேஷ்குமார், சரத்குமார், பிரவீன், சந்தோஷ்குமார், கருப்புசாமி (உள்பட 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகாரிகள்ஆய்வு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலகிருஷ்ணன், தாசில்தார் ஸ்டெல்லா ராணி ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ஜெயந்தி, அரசு வக்கீல் கிரி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் கனகராஜ், கவுன்சிலர்கள் மூசா, ஜேம்ஸ்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் அறிந்த நகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். பின்னர் மாணவர்கள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது–

விடுதியில் காலையில் வழக்கம்போல் 7.30 மணிக்கு சாப்பாட்டுடன் சாம்பார், ரசம் சேர்த்து உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்ட உடன் சாம்பாரில் ஏதோ கலந்தது போன்று இருந்தது. உடனே சாப்பாட்டை கொட்டி விட்டு மீண்டும் சாப்பாடு வாங்கி, அதில் ரசம் ஊற்றி சாப்பிட்டோம். அதன் பிறகு காலையில் பள்ளிக்கு சென்று விட்டோம். அங்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினோம். அவர் விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்தார். விடுதி காப்பாளர் எங்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள்.

 

Advertisements

நெல்லிக்குப்பம் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு காலாவதியான பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது காலாவதியான பாமாயில் பாக்கெட்டுகளை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

உணவுபாதுகாப்புஅதிகாரிகள்ஆய்வு

நெய்வேலியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி நெல்லிக்குப்பம் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், அண்ணாகிராமம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தசாமி ஆகியோர் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் உள்ள சத்துணவு மையத்தை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.

பின்னர் அவர்கள் சத்துணவு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சமையலுக்காக வைத்திருந்த பாமாயில் பாக்கெட்டை சோதனை செய்த போது, அந்த பாக்கெட்டுகள் காலாவதியானது என்று தெரிந்தது. இதையடுத்து 43 பாமாயில் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பொதுமக்கள் மத்தியில் கொட்டி அழித்தனர்.

பாத்திரங்களைமாற்றஉத்தரவு

அதன்பிறகு சமையல் செய்த உணவை ருசி பார்த்தனர். தொடர்ந்து சமையல் செய்யும் பழைய பாத்திரங்களை மாற்ற வேண்டும். சமைத்த உணவை சத்துணவு அமைப்பாளர் சாப்பிட்டு பார்த்த பிறகு தான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி உடனிருந்தார்.

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு

சேலம்:

சேலத்தில் உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்து, நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம், போதை வஸ்து விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில், கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களில், சேலம் செவ்வாய்ப்பேட்டை, குகை, ஜங்ஷன், அம்மாப்பேட்டை, சின்ன கடை வீதி உட்பட மாநகராட்சி பகுதியில் கைப்பற்றப்பட்ட, புகையிலை உள்பட, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகள், பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சேலம் டி.ஆர்.ஓ., செல்வராஜ், நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகளை பார்வையிட்டார்.
அதன் பின், அவற்றை அழிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி, சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள், போதை வஸ்துகளை எருமாபாளையம் குப்பை மேடு பகுதிக்கு கொண்டு சென்று, தீயிட்டு அழித்தனர்.

பான்மசாலா, குட்கா தடை எதிரொலி – மாற்றி யோசிக்கிறார்கள் – சுருட்டுக்கு டிமாண்ட் – திடீர் அதிகரிப்பு

பெரம்பலூர், ஜூலை 31:
                                                                                                                   பான்மசாலா, குட்கா தடை எதிரொலியாக பெரம்பலூரில் சுருட்டுக்கு டிமாண்ட் திடீரென அதிகரித்துள்ளது.
பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தடை விதித்தது. மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் கடைகளில் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையினரும், சுகாதாரத்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடித்த நபர்களிடம் இதுவரை ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் அபராத தொகையை சுகாதாரத்துறையினர் வசூலித்துள்ளனர். இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறையினரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளோடு, பெட்டி கடைகள் மற்றும் டீக்கடைகளில், இங்கு புகையிலை பொருட்கள் விற்கப்படமாட்டாது என அறிவிப்பு பலகை வைக்குமாறு 2 துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் ஒருசில இடங்களில், இவற்றைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். எளிதாக கிடைக்காத காரணத்தாலும், அதிகவிலைக்கு விற்கப்படுவதாலும் பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை உபயோகிப்பவர்கள் அவற்றை பயன்படுத்த முடியாமல் கடந்த சில வாரங்களாக தவித்து வருகின்றனர்.
இதற்கு மாற்றாக தற்போது புகையிலை பிரியர்கள் பலர், சுருட்டை வாங்கி பிரித்து அதிலுள்ள புகையிலையை வாயில் அடக்கி, தங்களின் புகையிலை தாகத்தை தணித்துக் கொள்கின்றனர்.

ஆண்கள் மட்டுமன்றி, புகையிலை போட்டு வந்த பெண்களும், கடைகளுக்கு சர்வசாதாரணமாக வந்து சுருட்டை வாங்கி சென்று துண்டாக்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சுருட்டுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலரான டாக்டர் புஷ்பராஜ் கூறுகையில், ‘பீடி, சுருட்டு, சிகரெட் போன்றவற்றை விற்பதற்கு தடை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை. பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுப்பதற்குக்கூட சுகாதாரத் துறையினருக்குத்தான் அதிகாரமுள்ளது. சுருட்டுக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டுக்கான உண்மை விவரம் தமிழக அரசுக்கு தெரியவந்து, அதற்கு தடைவிதித்தால் மட்டுமே, அதை விற்கக்கூடாது என தடுத்து நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.
மாற்றி யோசிக்கிறார்கள் : –
                                                                                                       இதுகுறித்து பெரம்பலூரில் உள்ள பெட்டிக்கடை உரிமையாளர் அயோத்தி கூறுகையில், ‘புகையிலை பொருட்களுக்கு அடிமையானவர்கள், அவர்களாக திருந்தாத நிலையில், அரசு எந்த சட்டம் போட்டாலும், அதற்கு மாற்றாக யோசிக்கிறார்களே தவிர, புகையிலையை மறக்க வேண்டுமென முடிவு செய்வதில்லை. இதனால் கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் விற்காவிட்டாலும், பதுக்கி வைத்து விற்கும் யாரிடமாவது வாங்கி பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்’ என்றார்.

அரசின் தடையை மீறி பான்மசாலா, குட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும்

சேலம், ஜூலை 31:
                                                                                                            தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, வாய்ப்புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பு வைத்துள்ள அனைத்து கடைகளும் இது போன்ற பொருட்களை ஒரு மாதத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த கெடு முடிந்ததையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைகளில் பான்மசாலா, குட்கா போன்றவை விற்கப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பலமுறை எச்சரித்தும் தொடர்ச்சியாக இது போன்ற போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், “போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் மீண்டும் விற்கப்பட்டது சோதனையின் போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பான்பாரக், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,“ என்றார்.

FSSAI is open to help industry, find solutions under FSSA: Chandramouli

Wednesday, July 31, 2013 08:00 IST
Our Bureau, New Delhi

                                                                                The Food Safety and Standards Authority of India (FSSAI) is ready to help the industry and find solutions but of course under the ambit of the Food Safety and Standards Act asserted K Chandramouli, chairperson, FSSAI, at a seminar on Food Safety Regulations in India organised by PHD Chamber in the capital on Tuesday.

He added that a collaborative approach needed to be adopted for implementation of the Act. Implementation is a huge challenge and multi-sectoral synergies are needed to penetrate it to the smallest Food Business Operator (FBO).

He stated that FSSAI was trying to setup a system in order to improve the efficiency and get better implementation as per the Act.

He said, “With the passage of time, the regulation will keep on tightening which will include transportation, packaging, warehousing etc. He said that implementation has to be carried out with proper system in place and with the help of state government. He finally said that periodic meeting and interactions can be organised in order to improve the system.”

B N Dixit, director (legal metrology), ministry of consumer affairs, said that already they had amended the packaged commodity rules. The industry definitely needs to abide by them.

Sharad Jaipuria, senior VP, PHD Chamber, in his welcome address emphasised,  “Despite producing and processing food, one of the prime responsibility that lies with the processors is to produce safe and healthy food. The policy-makers’ task is to make and implement laws and regulations that may enable production of safe food. Also with innovative products like nutraceuticals, functional foods etc., the regulations need to be in place.”

N M Kejriwal, chairman, agribusiness committee, PHD Chamber, during his theme presentation emphasised on the major problems that were being faced by the industry like licensing, labelling and product approval.

 

திருவாரூரில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருள்கள் அழிப்பு- தினமணி

திருவாரூர்

31 July 2013 03:37 AM IST

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பொருள்கள் அழிக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில், ரூ. 1.32 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களும், வலங்கைமான் பகுதியில் ரூ. 18,000 மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள கலப்பட டீ தூளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் திருவாரூர் நெய்விளக்குத் தோப்பு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு பள்ளத்தில் போட்டு மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன், புகையிலைப் பொருள்கள் அழிப்பு அலுவலர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் தெரிவிக்கலாம்: பான் மசாலா, குட்கா பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கீழ்காணும் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

உணவுப் பாதுகாப்பு அலுவலகம் 0466-220034.

முத்துபேட்டை எஸ். அன்பழகன் 9443744811, கூத்தாநல்லூர், மன்னார்குடி கே. மணாழகன் 868980725, திருவாரூர் நகரம் எம். பால்சாமி 9894924690, திருவாரூர் வட்டம் எழில் சிக்காயராஜா 9865689838, மன்னார்குடி வட்டம் ரெங்கராஜன் 9361888388, குடவாசல் வட்டம் லோகநாதன் 9361984400, திருத்துறைப்பூண்டி வட்டம் விஜயகுமார் 9842307869,

கோட்டூர் செல்வக்குமார் 9361444844, வலங்கைமான் எஸ். குருசாமி 9943331001, கொரடாச்சேரி, நீடாமங்கலம் செந்தில்குமார் 9788683354, நன்னிலம் லோகநாதன் 9842620977.