Home » DISTRICT PRESS NEWS » போலி மினரல் வாட்டர் கம்பெனிக்கு “சீல்’

போலி மினரல் வாட்டர் கம்பெனிக்கு “சீல்’

கிருஷ்ணகிரி:

அ.தி.மு.க., டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இருவர் கூட்டாக நடத்திய, போலி மினரல் வாட்டர் கம்பெனி சீல் வைக்கப்பட்டது.பர்கூர் டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு உறுப்பினர், அ.தி.மு.க.,வை சேர்ந்த துரைசாமி. 12வது வார்டு, அ.தி.மு.க., வார்டு உறுப்பினர் கிருஷ்ணன். இவர்கள் இரண்டு பேரும் பர்கூர் அடுத்த நேரலகோட்டை பகுதியில், “ஓம் சக்தி அக்வா மினரல் வாட்டர்’ என்ற பெயரில் கம்பெனி நடத்தி வந்தனர்.கம்பெனிக்கு சொந்தமான, 20 லிட்டர் மினரல் வாட்டர் கேனை தொகரப்பள்ளி கூட்டு ரோடில் பொதுமக்கள் வாங்கிய போது, அதில் புழுக்கள் இருப்பது தெரிந்தது. இந்த கம்பெனி வாட்டர் கேன்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை நேற்று முன்தினம் காலை தொகரப்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் சிறை பிடித்தனர்.தகவல் அறிந்த மத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வாட்டர் கேன்களுடன் மினி லாரியை மீட்டு சென்றனர். மேலும், போலீஸார் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஓம் சக்தி வாட்டர் கேனில் லார்வா புழுக்கள் இருந்ததை உறுதி செய்தனர். நேற்று மாலை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோ (பர்கூர்), துளசிராமன் (காவேரிப்பட்டணம்), சாமிநாதன் (கெலமங்கலம்), சேகர் (ஓசூர்) ஆகியோர் நேரலகோட்டையில் உள்ள “ஓம் சக்தி அக்வா மினரல் வாட்டர்’ கம்பெனிக்கு சென்று சோதனை நடத்தினர்..அப்போது, மினரல் வாட்டர் தயாரிக்கும் லேப் வசதி, ஓம் சக்தி மினரல் வாட்டர் கம்பெனியில் இல்லை என்பதும் ஐ.எஸ்.ஓ., மற்றும் பி.ஐ.எஸ்., சான்றுகள் இல்லாமல் இருந்தது தெரிந்தது.
தண்ணீரை சுத்திகரிக்காமல் போலியாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தியது தெரிந்தது. இதை தொடர்ந்து கம்பெனிக்கு சீல் வைத்தனர்.உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி கூறுகையில்,”” மினரல் வாட்டர் கம்பெனி நடத்த முறையான உரிமம் வாங்கவில்லை. இங்கு சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரி சென்னைக்கு ஆய்வுக்காகஅனுப்பி வைத்துள்ளோம்,” என்றார்.

Leave a comment