வணிகர்களுக்கு எச்சரிக்கை

சென்னை, ஏப். 30: 
                                         உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக துறை விடுத்துள்ள அறிக்கை: 
கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்கு மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்ற பழ வகைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகையால் கோயம்பேடு காய்கனி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி பழவகைகளை வெகுவிரைவில் விற்பனை செய்யும் நோக்கில் செயற்கை முறையில், அதாவது தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ, செயற்கை வேதி பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கூடாது. செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடும், பொது மக்களுக்கு உணவுபாதை அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி வயிற்று போக்கு, தலை சுற்றல் மற்றும் புற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே செயற்கை முறையில் பழுக்க வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
Advertisements

வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு – கோயம்பேடு, பாரிமுனையில் கார்பைடு கற்களில் பழுக்க வைத்த 1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை, ஏப். 30:
                                                                        கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் 10க்கு மேற்பட்ட அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கால்சியம் கார்பைடு கல்கள் மூலம் பழுக்க வைத்த
60 ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பழங்களை குப்பை கிடங் கில் கொட்டி அழித்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தனர். அப்போது, இந்த மார்க்கெட்டில் 500 பழக்கடைகள் உள்ளன. தினமும் 2 டன் மாம்பழம் விற்பனை ஆகிறது. லாரியில் பழங்களை கொண்டு வரும்போதே கார்பைடு கற்களை வைத்து, கொண்டு வரப்படுகிறது. இதனால், மாம்பழம் வரும் வழியிலேயே பழுத்து விடுகிறது. மரத்திலேயே பழுக்க வைத்து அந்த பழங்களை விற்பனைக்கு கொண்டு வருவது என்பது முடியாத காரியம்.
அதிகாரிகள், திடீர் திடீரென பழங்களை பறிமுதல் செய்ய வருகிறீர்கள். இயற்கையாக பழங்களை பழுக்க செய்ய சேம்பர் அமைத்து கொடுங்கள். நாங்கள் அதில் பழுக்க வைக்கிறோம். சுமார் 10 கடைகளில் உள்ள பழங்களை பறிமுதல் செய்து, விளம்பரம் தேடுகிறீர்கள். மார்க்கெட்டில் உள்ள 500 கடைகளில் உள்ள பழங்களையும் உங்களால், பறிமுதல் செய்ய முடியுமா?.
உடனடியாக பழுக்க வைக்க தமிழக அரசு எங்களுக்கு தேவையான, சேம்பர் அமைத்து கொடுக்க வேண்டும். இதுபோல் வந்து எங்களை நஷ்டம் அடைய செய்யாதீர்கள். நீங்கள் பத்திரிகைகளை அழைத்து வந்து, விளம்பரம் தேடி கொள்கிறீர்கள். எங்களுக்கு பழங்களை எப்படி விற்கவேண்டும் என சொல்லி கொடுங்கள் என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த பழங்கள் வெள்ளை பவுடர் பூசியதுபோல இருக்கும். பழத்தின் மேல் பாகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். இந்த பழங்களை சாப்பிட் டால் உடல் நலம் கெடும். எனவே இந்த பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு அலுவலர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். அதில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் அஜீரண கோளாறு, தலைவலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் போன்றவை வரும். புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
* பாரிமுனை தம்புசெட்டி தெரு, கிடங்கு தெரு, அரண்மனைக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் மாம்பழங்களை கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி லட்சுமி நாராயணனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆய்வாளர்கள் ஜெயகோபல், சிவசங்கரன், இளங்கோ ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 24 குடோன்களில் நடத்திய சோதனையில் 13 குடோன்களில் கார்பைடு கற்கள் மூலம் மாம்பங்களை பழுக்க செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து
40 ஆயிரம் மதிப் புள்ள 1 டன் மாம்பழங் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு பெட்டியில் சென்ட் ரல் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 22 அட்டை பெட்டிகளில் 1.4 டன் எடையுள்ள பான்பராக், குட்கா பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள், குட்கா பொருட்களை லாரி மூலம் கொண்டு சென்று, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ராட்சத பள்ளம் தோண்டி, அதில் அவற்றை கொட்டி அழித்தனர்.
வணிகர்களுக்கு எச்சரிக்கை 
சென்னை, ஏப். 30:
உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக துறை விடுத்துள்ள அறிக்கை:
கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்கு மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்ற பழ வகைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகையால் கோயம்பேடு காய்கனி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி பழவகைகளை வெகுவிரைவில் விற்பனை செய்யும் நோக்கில் செயற்கை முறையில், அதாவது தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ, செயற்கை வேதி பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கூடாது. செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடும், பொது மக்களுக்கு உணவுபாதை அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி வயிற்று போக்கு, தலை சுற்றல் மற்றும் புற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே செயற்கை முறையில் பழுக்க வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களால் புற்றுநோய் ஆபத்து

                                                                                           ‘கால்சியம் கார்பைடு’ கற்கள் மூலம், செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தால், உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுவதோடு, புற்றுநோய் ஆபத்தும் உண்டு என, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் எச்சரித்து உள்ளார்.
தற்போது, மாம்பழ சீசன் துவங்கி விட்டது. தமிழகம் முழுவதும், பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இயற்கையாக பழுக்க, இரண்டு வாரம் வரை ஆகும் என்பதால், அதுவரை காத்திராமல், ‘கால்சியம் கார்பைடு’ என்ற வேதிக்கல் உதவியுடன், செயற்கையாக பழுக்க வைத்து, பணம் பண்ணவே, பெரும்பாலான வியாபாரிகள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: மாம்பழம் இயற்கையாக பழுக்க, 12 முதல் 15 நாட்கள் ஆகும். செயற்கையாக பழுக்க வைக்க, இரண்டு நாட்களே போதும். இதற்காக, தடையை மீறி, வியாபாரிகள், ‘கால்சியம் கார்பைடு’ கற்களை, பழக்கூடையின் கீழே வைக்கின்றனர். இக்கற்களில் இருந்து, ‘அசிட்டிலீன்’ வாயு வெளியேறுகிறது. இதனால், காய்கள் சீக்கிரம் பழமானது போல் காட்சி அளிக்கின்றன. ஆனால், பழத்தின் நீர் சத்து உறிஞ்சப்பட்டு, உள்ளே வறட்சியாக காணப்படும். இதை சாப்பிடுவதால், வயிற்றுப் போக்கு, வாந்தி, தீராத தலைவலி, மயக்கம் வரும். தொடர்ந்து சாப்பிடுவதால், பெரும் சிக்கல் ஏற்படும். ‘கால்சியம் கார்பைடு’ கற்களில் இருந்து, புற்றுநோயை உருவாக்கும், ‘ஆர்சனிக்’ என்ற வேதிப்பொருள் பழத்தைச் சுற்றி படர்ந்து விடும். இதை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. செயற்கையாக பழுத்ததில், பழத்தை சுற்றி, சாம்பல் படர்ந்திருக்கும்; கரும் புள்ளிகள் இருக்கும். வெளியில் பழுத்தது போலவும், உள்ளே காயாகவும் இருக்கும். இயற்கையாக பழுத்த பழங்களில், இதுபோன்ற நிலை இருக்காது. குறைந்த விலையில் கிடைக்கிறது என, இவற்றை வாங்கி சாப்பிடாமல், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும், வியாபாரிகளுக்கு, இதை வலியுறுத்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
2 டன் பழங்கள் பறிமுதல்:
சென்னையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மூன்று குழுக்களாக பிரிந்து, சென்னை கோயம்பேடு, தி.நகர், கொத்தவால்சாவடி மார்க்கெட்களில், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ‘கார்பைடு கற்கள்’ வைத்து பழுக்க வைக்கப்பட்ட, இரண்டு டன் மாம்பழம், அன்னாசி உள்ளிட்ட பழங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இவை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. வியாபாரிகள் எதிர்ப்பு: கோயம்பேடு பழ மார்க்கெட்டில், அதிகாரிகள் திடீர் சோதனை செய்தபோது, பழங்களை பறிமுதல் செய்ய, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களுக்கு, அரசு மாற்று வழியை உருவாக்க வேண்டும்; மார்க்கெட் பகுதியில், பழங்களை பழுக்க வைக்கும் கிடங்குகள் அமைத்துத் தர வேண்டும்’ என, கேட்டனர். ‘அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அதிகாரிகள் சமாளித்தனர்.

How to know artificially-ripened fruits

                                                                       Fruits ripened using the chemical will have an ash-coloured layer on the skin.
If you wipe this layer, you will find the skin of uniform colour without any green patches.
Also gradually, the skin gets dry and wrinkled and black spots develop.

Accused in Mango Case Seeks Bail

                                                                                    The Additional District Session’s Court will issue an order on June 3 on the bail petition filed by the person arrested for supplying spurious mangoes in Nettoor. 
While hearing the bail petition filed by Sanu, 38, Karthika Nivas, who is the owner of E D S Fruit Stall, the prosecution opposed granting him bail. 
P K Sajeevan, government pleader and Public Prosecutor, submitted that the accused person had committed a serious crime. He said that mangoes seized from the goodown of the accused contained calcium carbide that could cause serious diseases, including cancer. The prosecution also filed reports from the police and food safety experts. 
Meanwhile, the counsel for the accused pleaded that he was falsely implicated in the case. 
According to the counsel, he did not commit any offence for which he could be charged under IPC-328. He said the police had registered a suo motu case against him.
Food safety officials seized 35 boxes of mangoes treated with calcium carbide, which is used for artificially ripening fruits.

Food poisoning fells more than 100 at Maryland food safety summit

(Reuters) –

                                                                                          A U.S. food safety summit in Maryland earlier this month has become a cautionary tale after more than 100 attendees came down with suspected food poisoning.

Most of those affected complained of diarrhea, the Maryland Department of Health and Mental Hygiene said in a statement.

Local health officials have heard from about 400 of the 1,300 attendees and are at a loss as to the exact cause of their illness.

The April 8-10 meeting at the Baltimore Convention Center included representatives from the U.S. Food and Drug Administration and the Centers for Disease Control and Prevention, and food companies such as McDonald’s Corp, Tyson Foods Inc and ConAgra Foods Inc.

“We are working on evaluating possible exposures and doing testing at the Maryland state public health laboratory to attempt to identify an agent,” the health department said in the statement.

The convention center and its food service provider, Centerplate, were inspected by city health officials. Centerplate was issued a violation notice for condensation dripping from an ice machine in the kitchen, according to NBC News.

Centerplate declined a Reuters’ request for comment.

(Reporting by Lindsay Dunsmuir in New York; Editing by Ian Simpson and Andre Grenon in New York)

கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.1 லட்சம் மாம்பழம் பறிமுதல்

                                                                                மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. இதனால் சென்னைக்கு மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் மாம்பழங்கள் ‘கார்பைடு கல்’ வைத்து பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதாசிவம் மற்றும் அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது 2 கடைகளில் இருந்த மாம்பழ பெட்டிகளில் அவற்றை பழுக்க வைப்பதற்காக ‘கார்பைடு’ ரசாயன கல் வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். 1 கிலோ எடையுள்ள அந்த கற்கள் அப்பறப்படுத்தப்பட்டன.

‘கார்பைடு’ கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் ஒருவர் கூறியதாவது:–

‘கார்பைடு, ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால், உடல் நலம் பாதிக்கப்படும். வயிற்று போக்கு, தலைசுற்றல் ஏற்படும். புற்றுநோய் வரவும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த முறையில் மாம்பழம் பழுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற மாம்பழங்களை சாப்பிடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.