Home » DISTRICT PRESS NEWS » குளிர்பான பாட்டிலுக்குள் கிடந்த பூச்சி

குளிர்பான பாட்டிலுக்குள் கிடந்த பூச்சி

ஆத்தூர்: ஆத்தூரில், இறந்த பூச்சி கிடந்த குளிர்பானத்தை அருந்திய வாலிபர், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 24. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம், 12 மணியளவில் ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள, அங்கம்மாள் பீடா கடையில், ‘பெப்சி’ குளிர்பானத்தை வாங்கி அருந்தியுள்ளார். குளிர்பானத்தினுள், இறந்த பூச்சி கிடப்பதை அறியாமல் குடித்துள்ளார். பின்னர், பூச்சி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சில நிமிடங்களில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவலறிந்த ஆத்தூர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுந்தர்ராஜ் ஆகியோர், பூச்சி கிடந்த குளிர்பான பாட்டிலை வாங்கி சோதனை செய்தனர். அந்த குளிர்பான பாட்டிலை, ‘சீல்’ வைத்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பீடா கடையில், குளிர்பான பாட்டில்களை ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s