திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஸ்ரீராமபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவர், ஸ்ரீராமபுரத்தை அடுத்த கருப்பிமடம் என்னுமிடத்தில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். பின்னர் அங்கு ஒரு குளிர்பான பாட்டிலை வாங்கினார். அதனை குடிக்க முயன்றபோது, பாட்டிலுக்குள் கறுப்பு நிறத்தில் ஒரு பூச்சி செத்து கிடப்பதை அவர் கண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்பர் அலி, இது குறித்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் சாம்இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் பூச்சி கிடந்த குளிர்பான பாட்டிலை அக்பர் அலியிடம் இருந்து வாங்கி சோதனை செய்தனர். அப்போது அந்த பாட்டிலுக்குள் கிடந்தது கரப்பான் பூச்சி என்று தெரியவந்தது. குளிர்பானத்தை பாட்டிலுக்குள் அடைக்கும் போது, கரப்பான் பூச்சியுடன் சேர்த்து அடைத்துள்ளனர். அந்த குளிர்பானம் மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் அந்த பேக்கரியில், சோதனை செய்தபோது காலாவதியான 50 பாட்டில் குளிர்பானத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Its best safety informative post!!