Home » DISTRICT PRESS NEWS » மலாடில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ஓட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறித்தவர் கைது

மலாடில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ஓட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறித்தவர் கைது

மும்பை,

மலாடில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ஓட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறித்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டல்களில் பணம் வசூலிப்பு

மும்பை மலாடில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி என்று கூறி ஒருவர், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஆய்வு செய்வதற்கு கட்டணமாக தலா ரூ.3 ஆயிரம் வசூலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சில ஓட்டல் உரிமையாளர்கள் அவரை படம் பிடித்து தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மற்ற ஓட்டல் உரிமையாளர்களுக்கு அனுப்பினார்கள்.

இந்தநிலையில், இது தெரியாமல் அந்த நபர் நேற்றுமுன்தினம் மலாடு எஸ்.வி. சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று, சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றின் மாதிரிகளை சேகரித்து கொண்டு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்கு ரூ.3 ஆயிரம் தரும்படி கேட்டார்.

கைது

உடனே அந்த ஓட்டல் உரிமையாளர் ரகசியமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் உண்மையிலேயே உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டல் உரிமையாளர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் தவால் பன்சாலி என்பதும், இதுவரை அவர் 5–க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் பணம் பறித்ததும் தெரியவந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s