Home » DISTRICT PRESS NEWS » கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் ரவை–கோதுமை மாவு பொட்டலங்கள் மூட்டை, மூட்டையாக கிடந்தன

கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் ரவை–கோதுமை மாவு பொட்டலங்கள் மூட்டை, மூட்டையாக கிடந்தன

கடலூர்,

கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் ரவை–கோதுமை மாவு பொட்டலங்கள் உணவு பொருட்கள் மூட்டை, மூட்டையாக வீசப்பட்டு கிடந்தன. இதை வீசியமு யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு பொருட்கள் வீச்சு

கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் எதிரே குண்டு சாலையில் தென்பெண்ணையாறு கரையோரத்தில் நேற்று காலை யாரோ சில மூட்டைகளில் பொருட்களை வீசிச்சென்று விட்டனர். அதில் ரவை, கோதுமை, மைதா, சர்க்கரை, உளுந்து, பிஸ்கட், உப்பு போன்ற பொருட்கள் அதிக அளவில் இருந்தன.

மொத்தம் 15 மூட்டைகள் அளவுக்கு அந்த பொருட்கள் இருக்கும். சாலையோரத்தில் கிடந்த அந்த பொருட்கள் அனைத்தும் பிரபலமான நிறுவனங்கள் தயாரித்தவை ஆகும். காலாவதியான பொருட்களே அதிக அளவில் இருந்தன. இருப்பினும் அதனை கொண்டு வந்து வீசியது யார்? என்று தெரியவில்லை.

நிவாரண பொருட்களா?

சமீபத்தில் பெய்த கன மழையால் மாவட்டமே வெள்ளத்தில் தத்தளித்தது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். அந்த பொருட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பிரித்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அதை முழுமையாக அனுப்பாமல் மீதியுள்ள உணவு பொருட்களை யாராவது சாலையோரத்தில் வீசிச்சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது பற்றி மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வெள்ள நிவாரண பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. எந்த பொருளும் இருப்பு இல்லை என்றார்.

விசாரணை

இது பற்றி தாசில்தாரிடம் கேட்ட போது, மளிகைக்கடையில் இருந்து யாராவது காலாவதியான பொருட்களை வீசிச்சென்றிருக்கலாம். அது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இது பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மாவு பொருட்கள் அனைத்தும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் வீணாகி விடும். இந்த பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி உள்ளது. இதை யார் வீசி சென்றார்கள்? என்பது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கலெக்டர் அலுவலகம் அருகே மூட்டை, மூட்டையாக உணவு பொருட்கள் கிடந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s