Home » DISTRICT PRESS NEWS » மீண்டும் நூடுல்ஸ் சர்ச்சை: சில நூடுல்ஸ்கள் தரமற்ற நிலையில் இருந்ததை கண்டறிந்தது உ.பி ஆய்வகம்

மீண்டும் நூடுல்ஸ் சர்ச்சை: சில நூடுல்ஸ்கள் தரமற்ற நிலையில் இருந்ததை கண்டறிந்தது உ.பி ஆய்வகம்

பார்பங்கி,

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக கரீயம் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில், மேலும் சில நூடுல்ஸ் பிராண்டுகள் தரமற்று இருப்பதை உத்தர பிரதேச உணவு பாதுகாப்புத்துறை கண்டறிந்துள்ளது.

இது குறித்து பாரபங்கி மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் சிங் கூறும் போது, “நார் சூப்பி நூடுல்ஸ், ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ் நூடுல்ஸ், சிங்கின் ஹாட் கார்லிம் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை கடந்த ஆண்டு மே மாதம் நகர வணிக வளாகத்தில் இருந்து  திரட்டி அதை சோதனைக்கு உட்படுத்தினோம்.

இந்த மாதிரிகள் லக்னோவில் உணவு ஆய்வு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப் பட்டன. இதில் சேர்க்கப்பட்டுள்ள சுவையூட்டியில் சாம்பல் அளவு அனுமதிக்கட்டதைவிட அதிகமாக  இருந்தது தெரியவந்தது. எனவே இது தரமற்ற நூடுல்ஸ் என தெரியவந்துள்ளது. இந்த நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட சாம்பல் சத்து 1 சதவீதம் என்று இருக்கும் நிலையில், 1.83 சதவீதம் என்ற நிலையில், அதிகமாக உள்ளது. ஹார்லிக்ஸ் பூடுல்ஸில் 2.37 சதவீதமும் சூபி நூடுல்ஸில் 1.89 சதவீதமும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய இந்நிறுவனங்களுக்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து ஜிஎஸ்கே நுகர்வோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது, உணவு பாதுகாப்பு தர நிர்ணையம் விதிகளின் படிதான் நாங்கள் பூடுல்ஸை தயார் செய்கிறோம்” என்றார். நார் நூடுல்சை தயாரிக்கும் ஹிந்துஸ்தான்  யுனிலீவர் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது த, எந்த பதிலும் வரவில்லை. ஹாட் கார்லிக் நூடுல்ஸை உற்பத்தி செய்யும், கேபிடல் ஃபூட் நிறுவனத்தை இது பற்றி கேட்பதற்காக தொடர்பு கொள்ள முடியவில்லை.

முன்னதாக கடந்த ஆண்டு  நெஸ்லே நிறுவனத்தில் மேகி நூடுல்ஸ் தயாரிப்பில், அளவுக்கு அதிகமான ரசாயன கலப்பு இருப்பதாக கூறப் பட்டதால் கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவில் மேகி உணவுப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து வெளி நாடுகளில் உள்ள சோதனை கூடங்களில் மேகி நூடுல்ஸ் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மேகி உணவு பொருள் பாதுகாப்பானது என்று சான்றிதழ் அளிக்கப்பட்டது.பின்னர் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் மேகி பாதுகாப்பானது என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மேகி மீதான தடையை கடந்த மாதம் மும்பை ஐகோர்ட்டு விலக் கிக்கொண்டது. இதையடுத்து மேகி மீண்டும் தனது விற்பனையை துவங்கியுள்ளது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s