Home » DISTRICT PRESS NEWS » செஞ்சியில் உரிமமின்றி இயங்கிய இறைச்சிக் கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

செஞ்சியில் உரிமமின்றி இயங்கிய இறைச்சிக் கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

செஞ்சியில் உரிமமின்றி இயங்கி வந்த இறைச்சிக்கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
கோர்ட்டில் வழக்கு
செஞ்சி        பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் இறைச்சிக் கடைகள் உரிய உரிமம் இல்லாமலும், சட்ட விதிகளை பின்பற்றாமலும்,  இயங்குவதாகவும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாகவும்,  மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் 5–ந்தேதி வரையில் உரிமம் பெறாத இறைச்சி கடைகள் செயல்பட இடைக்கால தடை உத்தரவை கோர்ட்டு பிறப்பித்தது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் நேற்று செஞ்சியில் பொது இடங்களிலும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து, பேரூராட்சியில் உரிய உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சிகடைகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜகணபதி, உணவு பாதுபாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி, செஞ்சி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், சமரேசன், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் சிங்கவரம் சாலை, காந்தி பஜார், தேசூர்பாட்டை ஆகிய இடங்களில் இயங்கி வந்த கோழி, ஆட்டிறைச்சி, மற்றும் மாட்டிறைச்சி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
நோட்டீசு
இதன் மூலம் நேற்று 4 கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து 20 கடைகளுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் விலங்குகளை வதை செய்வது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இறச்சிக்கடை நடத்துபவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்ட விதிகளை பின்பற்றிட வேண்டும் என்று இறைச்சிக்கடை நடத்துபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s