Home » DISTRICT PRESS NEWS » உணவு பாதுகாப்பு அதிகாரி மீது வணிகர் சங்க பேரமைப்பு புகார்

உணவு பாதுகாப்பு அதிகாரி மீது வணிகர் சங்க பேரமைப்பு புகார்

சேலம்: சேலம் உணவு பாதுகாப்பு அதிகாரியின் கெடுபிடியான சோதனையால், ஜவ்வரிசி, வெல்லம் தயாரிப்பு தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட கூட்டம், தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு அமல்படுத்தவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் பொருட்கள் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பொதுமக்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு முனை வரிவிதிப்பு, குறைந்த வரி விகிதங்கள், வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு தொடர்ந்து அதே நிலை போன்ற அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை மத்திய அரசு கவனத்துடன் பரிசீலித்து நிறைவேற்றித் தர வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி, வெல்லம் ஆகியவை காலம் காலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. சேலம் உணவு பாதுகாப்பு அதிகாரியின் கெடுபிடியான சோதனையால், ஜவ்வரிசி, வெல்லம் தயாரிப்பு தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயார் செய்யப்படும் பொருட்களுக்கு கெடுபிடிகளை அதிகரித்து விட்டு, வெளிநாட்டில் தயாராகும் மேகி உள்ளிட்ட உளவுப் பொருட்களின் விற்பனைக்கு வழி வகை செய்யப்படுகிறது. இந்த பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட செயலாளர் வர்க்கீஸ், மாநில இணை செயலாளர் திருமுருகன், பொருளாளர் சந்திரகாசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s