Home » DISTRICT PRESS NEWS » அரியலூரில் ஹோட்டல், கடை, பேக்கரிகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

அரியலூரில் ஹோட்டல், கடை, பேக்கரிகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

அரியலூர், :  பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூரிலுள்ள வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டு ஒரு லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை  பறிமுதல் செய்தனர். அரியலூர் கலெக்டரின் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் நகராட்சி பகுதியிலுள்ள பேருந்து நிலையம், ஜெயங்கொண்டம் பிரிவு சாலை, எஸ்பி அலுவலக எதிர்புறம் உள்ளிட்ட பல்வேறு சாலையோர பகுதியிலுள்ள கடைகள், ஹோட்டல்கள், தேனீர் விடுதிகள், இனிப்பு மற்றும் கார வகைகள், கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் அரியலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வணிகர்களிடம் உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ் தெரிவித்ததாவது, உணவு பதார்த்தங்களான இனிப்பு மற்றும் கார வகைகள், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி கீழ்கண்டவாறு சுகாதாரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  தீபாவளி பலகாரங்கள் தயார் செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள், எண்ணெய், நெய் மற்றும் வனஸ்பதி போன்றவை தரமானதாக இருக்க வேண்டும். பலகாரம் செய்ய பயன்படுத்திய உணவு எண்ணையை எக்காரணத்தை கொண்டும் மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது விதிமுறைகளை பின்பற்றாமல் இனிப்பு மற்றும் கார வகை பண்டங்கள் தயார் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டம் முழுவதும் இதுபோன்று தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என வணிகர்களிடம் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் பலகாரங்கள் செய்வதற்கான மூலப்பொருட்களின் தன்மை மற்றும் காலாவதி தேதி, காலாவதியான பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றனவா என்றும், தேனீர் விடுதிகளில் கலப்படம் செய்யப்பட்ட டீத்தூள் உபயோகப்படுத்தப்படுகின்றதா என்றும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அரியலூர் நகர்பகுதியிலுள்ள 37 வணிக நிறுவனங்களில் 187 காலாவதி குளிர்பானங்கள், பிஸ்கட், பிரட், சைனா மிட்டாய்கள், தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் உள்ளிட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் ரத்தினம், ஸ்டாலின், சிவக்குமார் ஆகியோர் குழுவாகச் சென்று ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s