Home » DISTRICT PRESS NEWS » சாலையோர உணவகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

சாலையோர உணவகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

சாலையோர உணவகங்களை ஒழுங்குபடுத்தி அவர்கள் தயாரித்து விற்கும் உணவுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
உடல் உபாதைகள்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் அனைத்து நிறுவனங்களும் வருகின்றன. அச்சட்டத்தின்படி உணவு பொருட்களை அடைத்து வைக்கும் பாக்கெட்டுகளின் மீது அந்த நிறுவனங்கள் பாக்கெட் உணவுகளில் உள்ள சத்துகள், தயாரிக்கப்பட்ட தேதி, எந்த தேதிக்குள் அதனை சாப்பிடவேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் புதுச்சேரியில் பெரும்பாலான உணவு பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது இவைகள் குறிப் பிடப்படவில்லை. இதனால் அந்த உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும் மக்கள் பல்வேறு உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். மேலும் நொறுக்கு தீனிகளை சாப்பிடும் சிறுவர்களும் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே தீய நொறுக்கு தீனிகளின் பாக்கெட்டுகளில் சிகரெட் பாக்கெட்டுகளில் குறிப்பிடுவதைப்போல் இது உடலுக்கு தீங்கானது என்பதை அச்சிட வலியுறுத்த வேண்டும்.
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
சாலையோர உணவகங்களை ஒழுங்குபடுத்தி அவர்கள் தயாரித்து விற்கும் உணவுகளை ஆய்வுக்கு உட் படுத்த வேண்டும். பழங்களை பழுக்க வைப்பதற்கு ரசாயனங்களை பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் உணவு பொருட்களின் தரத்தை கண்காணிக்கும் அதிகாரிகளை கொம்யூன் வாரியாக நியமிக்கவேண்டும்.
தரமற்றது என சந்தேகம் ஏற்படும் உணவு மற்றும் மருந்துகளை ஆய்வு செய்ய நவீன பகுத்தாய்வு சோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். உணவு மற்றும் மருந்து பொருட்களின் தரத்தை அறிந்து உறுதிபடுத்தி கொள்ளவும், அதில் உள்ள கலப்படங்களையும், தரமற்ற உணவு மற்றும் மருந்துகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு குழு
மருந்து மற்றும் உணவு பொருட்களின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை தெரிவிக்க உணவு பாதுகாப்பு அதிகாரியின் செல்போன் எண்ணை கடைகளில் எழுதி வைக்கவேண்டும். புதுச்சேரி மாநிலம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவை நுகர்வோர் விவகாரங்கள் துறை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முருகானந்தம் கூறியுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s