Home » DISTRICT PRESS NEWS » நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் அன்னதானத்திற்கு பதிவு செய்ய வேண்டும்

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் அன்னதானத்திற்கு பதிவு செய்ய வேண்டும்

சிதம்பரம்:

நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது அன்னதானம் செய்ய விரும்புவோர் சிதம்பரம் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி வரும் 25ம் தேதி தேரோட்டம், 26ம் தேதி ஆருத்ரா மகா தரிசன உற்சவம் நடக்கிறது. உற்சவத்தின் போது பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் பதிவு செய்து, பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும். அன்னதானம் செய்ய விரும்புவோர் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை முன் அனுமதி பெற்ற பின், உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும்.

அன்னதானம் செய்ய பதிவு செய்ய சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வாளரின் 97895 41853 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அன்னதானம் செய்யப்படும் உணவு வகைகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு மாதிரி உணவு எடுத்து அனுப்பப்படும். உணவு வகைகளில் ஏதேனும் பொருள் கலப்படம், சுகாதார கேடு, உடல் நிலை பாதிப்பு போன்ற குறைபாடுகள் ஏற்பட்டால், அன்னதானம் செய்வோர் மற்றும் உணவு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s