Home » DISTRICT PRESS NEWS » வெள்ளம் பாதித்த வீடுகளில் கிணறு, குடிநீர் தொட்டிகளை சோதனை செய்ய 115 மருத்துவ குழுக்கள்

வெள்ளம் பாதித்த வீடுகளில் கிணறு, குடிநீர் தொட்டிகளை சோதனை செய்ய 115 மருத்துவ குழுக்கள்

சென்னை, டிச. 17–

வெள்ளம் பாதித்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

இவை தவிர வீடு வீடாக சென்று குளோரின் மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் வகையில் 115 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கிணறுகள், கீழ் நிலை தொட்டிகள் (சம்ப்) ஆகியவற்றை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பிளீச்சிங் பவுடர், குளோரின் திரவம் போன்றவற்றை தெளிக்கும் பணியில் இன்று முதல் ஈடுபடுகிறார்கள்.

அடையாறு ஆறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள வீடுகள், ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, சின்னமலை, மணப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த குழுக்கள் சென்று இந்த பணிகளை மேற்கொள்கிறது.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகளை கண்காணிக்க 21 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கொசு மருந்து, குளோரின் மாத்திரை, பிளீச்சிங் பவுடர் போன்றவை முறையாக வினியோகம் செய்கிறார்களா? என்பதை பறக்கும் படையில் இடம் பெற்றுள்ள டாக்டர், 2 உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை செய்வார்கள்.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, அதிகாரிகள் வடிவேல், சேகர் சரவணன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s