Home » DISTRICT PRESS NEWS » பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள சிற்றுண்டி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு சுகாதாரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க அறிவுரை

பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள சிற்றுண்டி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு சுகாதாரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க அறிவுரை

சென்னை,
பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள சிற்றுண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை உரிமையாளர்களிடம் சுகாதாரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தினர்.
பள்ளிக்கல்வித்துறைசுற்றறிக்கை
நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர்கள் வழியாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.
அதில், பள்ளிக்கூடங்களுக்கு எதிரே விற்பனை செய்யப்படும் பேல்பூரி உள்ளிட்ட சிற்றுண்டி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் முன்பு சுகாதாரமற்ற உணவு யார் விற்பனை செய்தாலும், அவர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், உணவு பாதுகாப்புத்துறைக்கும் சுற்றறிக்கை வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் (சென்னை) டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில், அதிகாரிகள் சதாசிவம், சரண்யா ஆகியோர் உள்பட ஏராளமான அதிகாரிகள் நேற்று சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள சிற்றுண்டி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
எச்சரிக்கை
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பள்ளிக்கூடங்கள் முன்பு விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம், பானி மற்றும் பேல்பூரி, சமோசா உள்ளிட்ட சிற்றுண்டி உணவு வகைகள் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? தயாரிக்கும் இடம் எப்படி இருக்கிறது? ஈ மொய்க்கும் திண்பண்டங்கள் எதுவும் விற்பனை செய்கிறார்களா? என்பதை இந்த ஆய்வில் மேற்கொண்டனர். அப்படி விற்பனை செய்யும் சிற்றுண்டி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், பள்ளிக்கூடங்களை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் அருகாமையில் இருக்கும் சிற்றுண்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், ஈ மொய்க்கும் அளவுக்கு திண்பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s