Home » DISTRICT PRESS NEWS » கச்சிராயப்பாளையம் பகுதி இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கச்சிராயப்பாளையம் பகுதி இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கெட்டு போன இறைச்சி பறிமுதல்

கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சிலர் கெட்டுபோன இரைச்சிகளை விற்பதாக விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி வரலட்சுமி தலைமையில் அதிகாரிகள் நேற்று கச்சிராயப்பாளையம் கிராமத்தில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது மாதவச்சேரி சாலையில் உள்ள ஒரு கடையில் கெட்டு போன மாட்டு இறைச்சி விற்கப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 50 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து அந்த கடையை நடத்துவதற்கு தற்காலிகமாக தடையும் விதித்தனர். பின்னர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கச்சிராயப்பாளையம் பஸ் நிலையம் மற்றும் அக்கராயப்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த உரிமையாளர்களிடம், பிரியாணிக்கு கெட்டு போன இறைச்சியை பயன்படுத்தக்கூடாது,

நடவடிக்கை

மேலும் சமையல் செய்யும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். இதை மீறி யாரேனும் செயல்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது உணவு வரைவு முறையாளர்கள் லட்சுமணன், ரமேஷ், ஜெயராஜ், பொன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s