Home » DISTRICT PRESS NEWS » கோவை உக்கடத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லெட்

கோவை உக்கடத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லெட்

கோவை :

கோவை உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள குப்பை தொட்டியின் அருகில் நேற்று 500க்கும் மேற்பட்ட தேதி குறிப்பிடப்படாமல் காலவதியான சாக்லெட்டுகள் குவிந்து கிடந்தது. சாக்லெட்டுகள் கவரை அகற்றாமல் அப்படியே தூக்கிவீசி சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சாக்லெட்டுகளை எடுத்து சாப்பிடும் அபாயம் உள்ளது. இதனை உட்கொண்டால் வயிற்று வலி, வாந்தி உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாக்லெட்டுகளை எடுத்து குழந்தைகள் சாப்பிட்டு ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் அதனை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பகீர் தகவல்:
கோவையில் தரமற்ற சாக்லெட்டுகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக கோக்கோ பட்டர் மூலமாக செய்யப்படுபவை மட்டுமே சாக்லெட். இப்படி செய்யப்படும் சாக்லெட்டுகள் வாயில் போட்டவுடன் எளிதில் கரைந்துவிடும். ஆனால், தற்போது வெஜ்டேபிள் ஃபேட் ஆயில், டால்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சாக்லெட்டுகள் நீண்ட நாட்கள் கெட்டி தன்மையுடன் கூடியதாக இருக்கும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வகையான சாக்லெட்டுகள் தற்போது கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இவற்றுக்கு காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்கின்றனர். இது போன்ற சாக்லெட்டுகள் கெட்டுப்போனால் குளக்கரை, சாலைகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதை உணவு பாதுகாப்பு துறையினரும் கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s