Home » DISTRICT PRESS NEWS » வெள்ள நிவாரண பொருட்கள் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

வெள்ள நிவாரண பொருட்கள் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

imggallery

கடலுார்:

கடலுார் மாவட்டத்திற்கு வரும் பிற மாவட்ட நிவாரணப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலுார் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. காலாவதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பிற மாவட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பண்ருட்டி நல்லதம்பி, கடலுார் நந்தகுமார், வடலுார் சுப்ரமணியன், புவனகிரி குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s