Home » DISTRICT PRESS NEWS » உணவுப் பொருள்களில் 5-இல் 1 கலப்படம்: ஆய்வில் தகவல்

உணவுப் பொருள்களில் 5-இல் 1 கலப்படம்: ஆய்வில் தகவல்

அரசு ஆய்வுக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பொருள் தரப் பரிசோதனையில் 5-இல் 1 கலப்படம் மற்றும் போலியானது என

அரசு ஆய்வுக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பொருள் தரப் பரிசோதனையில் 5-இல் 1 கலப்படம் மற்றும் போலியானது என தெரியவந்துள்ளது.
குறிப்பாக, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் கலப்பட உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய உணவு தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2015-ஆம் ஆண்டின் நவம்பர் வரையிலான காலத்தில், பல்வேறு மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பு ஆய்வுக்கூடங்கள், 83,265 உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக பெற்றன. இதில், 74,010 உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 14,599 உணவு மாதிரிகளில், கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐந்தில் ஒரு பங்கு உணவுப் பொருளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் உணவில் கலப்படம் செய்யப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தரப் பரிசோதனையில் இம்மாநிலத்திலிருந்து பெறப்பட்ட, 4,119 உணவு மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, பஞ்சாப் (1,458), மத்திய பிரதேசம் (1,412), குஜராத் (1,243), மஹாராஷ்டிரம் (1,162) மற்றும் தமிழ்நாடு (1,047) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கலப்படம் செய்ததாகத் தொடரப்பட்ட 2,795 வழக்குகளில், ரூ.10.93 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், உத்தர பிரதேசத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் மட்டும் அதிகபட்சமாக, ரூ.5.98 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவுக் கலப்படம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில், 2,676 குற்ற வழக்குகளாகவும், 7,860 சிவில் வழக்குகளாகவும் உள்ளன.
இதில், 1,402 வழக்குகளில் குற்றம் நிரூபணமாகியுள்ளது என உணவுத் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் கலப்படம் மற்றும் போலி உணவுப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்திய உணவுத் தர நிர்ணய ஆணையம் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, ரூ.1,750 கோடியை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s