Home » DISTRICT PRESS NEWS » சூடான உணவுகளை பாலிதீனில் கொடுக்காதீங்க; உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி எச்சரிக்கை

சூடான உணவுகளை பாலிதீனில் கொடுக்காதீங்க; உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி எச்சரிக்கை

விருதுநகர் : “”சூடான உணவுகளை பாலிதீன் போன்ற பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்துவதால் நோய்கள் வரும் ”என, உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது:சூடான உணவு பொருட்களை பார்சல் செய்ய பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துகின்றனர். இதில் வைக்கும் போது பிளாஸ்டிக் உடன் சேர்ந்து “பைபினோல் -ஏ’ என்ற வேதி பொருள் வெளிப்படுத்துகிறது. இந்த வேதி பொருள் தைராய்டு நோய் ஏற்படுவதற்கு காரணியாக அமைகிறது. உணவகங்கள், டீ கடைகளில் சிறிய பிளாஸ்டிக் கவர்களில் சூடாக சாம்பார்,ரசம், டீ போன்றவைகள் கட்டி பார்சல் செய்து வழங்கப்படுகிறது. அந்த பாலிதீன் பை குப்பையை எரிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் டை – ஆக்சின் என்ற வாயுவை சுவாசிக்கும் போது வயிற்றுக்கோளாறு, பசியின்மை, மலட்டுதன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. சில உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை போன்ற பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துகின்றனர். இதில் சூடான உணவுகளை பரிமாறும் போது இந்த தாள்களின் மேல் உள்ள மெழுகு உணவுடன் கலக்கிறது. மேலும் இந்த தாளில் உள்ள பச்சை நிற சாயம் உணவுடன் கலந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால் இதை பயன் படுத்த வேண்டாம். கடை உரிமையாளர்கள் உணவு பொருட்களை பிளாஸ்டிக் தாளில் பயன்படுத்துவதை தவிர்த்து “சில்வர் பாயில்’ உபயோகப்படுத்த வேண்டும், என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s