Home » DISTRICT PRESS NEWS » பெண் அதிகாரிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

பெண் அதிகாரிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சேலம்:

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு, துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேகோ பேக்டரிகளுக்கு செல்லும்போது, கட்டாயம் போலீஸ் உடனிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக அனுராதா உள்ளார். ஆத்தூர் பகுதியில் உள்ள சேகோ பேக்டரிகளில் கலப்படத்தை தவிர்ப்பதற்காக, இவர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வந்ததால், அடிக்கடி இவருக்கு மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது.

பல்வேறு தரப்பிலும் மிரட்டல்: ஓராண்டுக்கு முன், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் சேகோ பேக்டரியை சோதனையிட்டதால், நாமக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அதிகாரிகளை சந்தித்து பேசி, தன்னுடைய நிலையை எடுத்துக்கூறி, சேலம் மாவட்டத்துக்கே மீண்டும் வந்தார். அது மட்டுமின்றி, பல்வேறு தரப்பில் இருந்தும், அவருக்கு பலவிதமான மிரட்டல்கள் வந்தன. கடந்த, ஜூலை மாதம், நாமக்கல்லைச் சேர்ந்த சந்திரசேகரன் என்ற விவசாயி, சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் சரியான முறையில் ஆய்வு நடத்தாததால், ஜவ்வரிசியில் ரசாயன கலப்படம் அதிகம் இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

போலீசில் புகார்: அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஆத்தூரில் சேகோ பேக்டரி ஆய்வுக்கு சென்றபோது, பேக்டரி உரிமையாளர்கள், அதிகாரி அனுராதாவை முற்றுகையிட்டு, ஆத்தூர் பக்கம் ஆய்வுக்கு வரக்கூடாது என, நெருக்கடி கொடுத்தனர். ‘எனக்கு பாதுகாப்பு இல்லை, மிரட்டல் வருகிறது’ என, அவர், ஆத்தூர் போலீஸில் புகார் அளிக்க சென்றதால், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் கடும் கோபமடைந்தனர். இந்த பிரச்னையால், சேலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. டி.ஆர்.ஓ., செல்வராஜ் பேச்சு நடத்தி, பிரச்னையை தீர்த்து வைத்தார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு: தொடர்ந்து, தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி, உணவு பாதுகாப்பு அலுவலர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனடிப்படையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மற்றொரு நீதிபதி, புஷ்பாசத்யநாராயணா ஆகியோர், ‘அதிகாரி அனுராதாவுக்கு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சேகோ பேக்டரியில் ஆய்வுக்கு செல்லும் போது, போலீசார், கட்டாயம் அவருடன் செல்ல வேண்டும்’ என, சேலம் மாவட்ட கலெக்டர், கமிஷனர், எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளனர். அது தொடர்பான, பேக்ஸ் கடிதம், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு வந்துள்ளது. இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், ”என்னுடைய அலுவலகத்துக்கு, உயர்நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வந்துள்ளதாக ஊழியர்கள் கூறினர். நான், இன்னும் அதை பார்க்கவில்லை, கடிதத்தை பார்த்தால் தான், அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவரும்,” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s