Home » DISTRICT PRESS NEWS » திருச்செந்தூரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

திருச்செந்தூரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

திருச்செந்தூர் பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை ஆகியன சார்பில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பொன்முத்து ஞானசேகர், மாரியப்பன், சண்முகசுந்தரம், சிவபாலன் உள்ளிட்டோர், திருச்செந்தூர் கோயில் வாசல் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், அன்னதானம் நடைபெறும் இடங்கள் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தினர்.

பாதுகாப்பான உணவு தயார் செய்தல் மற்றும் விற்பனை செய்வது குறித்த அறிவிப்பு துண்டுப் பிரசுரம் வழங்கினர். மேலும் உணவகங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் மருத்துவச்சான்று பெற்றிருக்கவேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s