Home » DISTRICT PRESS NEWS » ஓட்டல், உணவு விற்பனை: நிறுவனங்களுக்கு ‘கெடு’

ஓட்டல், உணவு விற்பனை: நிறுவனங்களுக்கு ‘கெடு’

சேலம்:

சேலம் மாவட்டத்தில், ஓட்டல் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், பிப்., 4ம் தேதிக்குள் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற ‘ காலக் கெடு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு கட்டணம் மற்றும் உரிம கட்டணம் பெற வேண்டும். ஆண்டு வருவாய், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு உரிம கட்டணம், 2,000 ரூபாய். இது தவிர, 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள நிறுவனங்கள், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு கட்டணம் மட்டும் பெற்றால் போதும். சேலம் மாவட்டத்தில், 25 ஆயிரம் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்ளது. இதில், 10 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு, உரிம கட்டணம் செலுத்தி வருகிறது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உரிமம் பெறாதவர்கள் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில்,”சேலம் மாவட்டத்தில், பதிவு, உரிம கட்டணம் செலுத்தாவர்களுக்கு, பிப்., 4ம் தேதி வரை காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் பெறாவிட்டால், நோட்டீஸ் வழங்குதல் உள்ளிட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது,” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s