Home » DISTRICT PRESS NEWS » சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்முக தேர்வில் குளறுபடி

சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்முக தேர்வில் குளறுபடி

சென்னை:

காந்திகிராம பல்கலையில் படித்தவர்களுக்கு மட்டுமே, சுகாதார ஆய்வாளர் பணி கிடைக்கும் என, விதிமுறை உள்ள நிலையில், மதுரை காமராஜர் பல்கலையில் படித்த வர்களுக்கும், சென்னை மாநகராட்சி நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
௧௯௦ பேர்
சென்னை மாநகராட்சியில், 71 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், சுகாதார ஆய்வாளர் பணிக்கான பட்டய படிப்பு முடித்த, 190 பேருக்கு சென்னை மாநகராட்சி நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம்
அனுப்பியது.
சரிபார்ப்பு
கடந்த இரண்டு தினங்களாக, அவர்களுக்கான
நேர்முக தேர்வு நடந்தது.
சென்னை மாநகராட்சி உட்பட, உள்ளாட்சிகளில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்ய, மதுரை மாவட்டத்தில் உள்ள காந்திகிராம
நிகர்நிலை பல்கலைக் கழகம், டில்லி தேசிய உயர்கல்வி கவுன்சில் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லுாரி ஆகிய வற்றில் மட்டுமே சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என, பொது சுகாதார சட்டத்தில்
விதிமுறை உள்ளது.
ஆனால், தற்போது சென்னை மாநகராட்சி நடத்திய நேர்முக தேர்வில் கலந்து கொண்ட
12 பேர், மதுரை, காமராஜர் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில், மற்ற விவரங்கள் தபால் மூலம் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, பொது சுகாதார சட்ட விதிமுறையில் மாற்றம் தேவை என்று கோரிக்கை எழுப்பிஉள்ள மதுரை காமராஜர் பல்கலை மாணவர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனருக்கு அளித்துள்ள ஒரு மனுவில்,
‘காந்திகிராம பல்கலை கழக பட்டய படிப்புக்கு நிகரான கல்வித்தகுதி எங்களுக்கு இருப்பதால், சுகாதார ஆய்வாளர் பணிக்கு எங்களையும் நியமனம்
செய்ய வேண்டும்’ என கூறி
உள்ளனர்.
ஏற்கனவே புதுச்சேரி பல்கலையில் சுகாதார ஆய்வாளர்
பட்டயம் பெற்ற இருவர், சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். சில மாதங்கள் பணிஆற்றிய பின், அவர்கள் பணி
நீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு சுகாதார ஆய்வாளர் பணியிடம் தொடர்பான விதிமுறை தெரிந்திருந்தும்,
மதுரை காமராஜர் பல்கலை மாணவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பிதழை அனுப்பி மாநகராட்சி அதிகாரிகளே சர்ச்சைக்கு வழிவகுத்து
உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s