Home » DISTRICT PRESS NEWS » அதிகப்படியான பால் உற்பத்திக்கு தாது உப்புக்கலவை அவசியம்:கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் தகவல்

அதிகப்படியான பால் உற்பத்திக்கு தாது உப்புக்கலவை அவசியம்:கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் தகவல்

டிசம்பர் 03,2013,23:46 IST

கோவை:

கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்கவும், கன்று ஈனும் தன்மையை அதிகப்படுத்தவும், தீவனங்களுடன் தாது உப்புக்கலவையை தினசரி கொடுக்க வேண்டும் என, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சிவக்குமார் தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க
சமீபத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கோவை மாவட்டத்தின் மண், கறவை மாடுகள் உட்கொள்ளும் பசுந்தீவனம் மற்றும் மாடுகளின் ரத்த மாதிரிகளை சேர்த்து, ஆய்வு செய்ததில், பெரும்பாலான கறவை மாடுகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் பால் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம், மாடுகளின் பால் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இதற்கு, மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்களான, தவிடு, புண்ணாக்கு மற்றும் தானியங்களோடு, கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் துத்தநாகம் அடங்கிய தாது உப்புக்கலவையை, ஒரு மாட்டிற்கு நாற்பது கிராம் என்ற அளவில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சிவக்குமார் கூறுகையில்,”” கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாது உப்புகலவையை மாடுகளின் தீவனங்களோடு சேர்த்து கொடுத்தால், ஒரு மாட்டில் தினசரி இரண்டு லிட்டர் பால் அதிகமாக உற்பத்தியாகும். மேலும் பாலில் கொழுப்பு சத்து அதிகரிப்பதுடன், சினைக்கு வராத கிடேரிகளின் கருப்பை முழு வளர்ச்சியடைந்து சினைக்கு வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
இதுதவிர, அதிக பால் உற்பத்தி திறனுள்ள கன்று ஈன்ற கலப்பின மாடுகள் மீண்டும் சினைக்கு வருதல், சினை முட்டை வெளியேறுதல், கரு உருவாகி கருப்பையில் தங்குதல், கரு நன்கு வளருதல், சுலபமாக கன்று ஈனும் வாய்ப்பை பெறுதல், நஞ்சுக்கொடி தாங்காமல் கன்று ஈன்றவுடன் வெளிவருதல் மற்றும் பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் இருப்பதற்கு, நோய் எதிர்ப்பு திறனையும் வளர்க்கிறது. இதை, கறவை மாடு வைத்திருப்போர், மாடுகளுக்கு தினசரி தீவனமாக கொடுத்தால், பால் உற்பத்தியை அதிகப்படுத்தலாம், என்றார்.

 

Displaying 04_12_2013_252_020.jpg

Advertisements

One thought on “அதிகப்படியான பால் உற்பத்திக்கு தாது உப்புக்கலவை அவசியம்:கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் தகவல்

  1. கறவை மாடு அதிக பால் உற்பத்தி பற்றி எனக்கு அறிவுரை தேவைப்படுகிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s