Home » DISTRICT PRESS NEWS » தூத்துக்குடி ஆவின் பால் விற்பனை மையங்களில் திடீர் சோதனை – Dinamalar Press news

தூத்துக்குடி ஆவின் பால் விற்பனை மையங்களில் திடீர் சோதனை – Dinamalar Press news

நாள் : ஜூன் 30,2013,06:23 IST

தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி நகரில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் காலாவதியான பால்பாக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் தனி தாசில்தார்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி நகர் பகுதிகளில் ஆவின் பால்வழங்கும் நிலையங்களில் திடீர்
சோதனை மேற்கொண்டனர்.

சிதம்பரம்நகர் ,டபிள்யூஜிசிரோடு, புதுக்கிராமம் உட்பட பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு சில கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் விலைக்கு விற்ற ஆவின் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விற்பனை தேதி முடிந்து காலாவதியான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. வருங்காலத்தில் இதுபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திடீர் சோதனை செய்யப்படும் என்றும் அப்போது கூடுதல் விலைக்கும், காலாவதியான பால்பாக்கெட்டுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கலெக்டர் அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்

Leave a comment