Home » DISTRICT PRESS NEWS » நல்ல தண்ணீர் வேண்டுமா ? – கவர் ஸ்டோரி – PUTHIYA THALAIMURAI NEWS

நல்ல தண்ணீர் வேண்டுமா ? – கவர் ஸ்டோரி – PUTHIYA THALAIMURAI NEWS

முருங்கை விதை, தேத்தாங்கொட்டை, அவரை விதை போன்ற இயற்கை விதைகளைக் கொண்டே மாசடைந்த நீரை சுத்தப்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார், சென்னை மாநிலக் கல்லூரி வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவி எஸ்.சசிகலா. அவர் தனது ஆய்வு குறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பகிர்ந்துகொண்டார்.
மாசடைந்து கலங்கலாக பயன்படுத்த இயலாத நீரை இயற்கை விதைகளைக்கொண்டு குடிநீராக மாற்றுவதுதான் என் ஆய்வு. நச்சுத் தன்மை இல்லாத, குறைந்த செலவில் செய்யக் கூடிய இந்த முறையால் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க இயலும். தற்போது மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் குடிநீரை சோதனைக்கூடத்தில் பாக்டீரீயோலாஜிக்கல் பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த நீரில் நச்சுத்தன்மை கொண்ட கனிமங்கள் இருப்பதுடன் ஈகோலி மற்றும் கோலிபார்ம் போன்ற, மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதும் உறுதியாகி உள்ளது.
விவசாயிகளின் போர்வெல் மற்றும் கிணறுகளில் இருந்து மலிவு விலைக்கு நீரை வாங்கி, செலவு இல்லாத சில சுத்திகரிப்பு முறைகளைச் செய்துவிட்டு நீரை அப்படியே பேக் செய்து விற்கிறார்கள். இன்னும் சிலர் இப்படி வாங்கும் நீரை, தொட்டியில் ஊற்றி அதில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டுவிடுகிறார்கள். இதனால், நீரில் இருக்கும் தேவையான, தேவையற்ற என்று அனைத்துக் கனிமங்களும் அடியில் படிந்து விடுவதோடு புற்றுநோயை உண்டாக்கும் அலுமினியம் சல்பேட்டின் நச்சுத் தன்மை நீரில் அப்படியே தங்கி விடுகிறது. இந்த முறையில் பாக்டீரியாக்களும் அழியாது.
என்னுடைய ஆய்வு நெறியாளர் பேராசிரியர் முத்துராமன் ஆலோசனைப்படி, இயற்கையில் கிடைக்கும் முருங்கை விதை, தேத்தாங்கொட்டை, அவரை விதை இந்த மூன்றையும் பொடியாக்கி நீரில் கலந்து அதில் உள்ள தேவையற்ற பாக்டீரியா, பூஞ்சை, காட்மீயம், காரீயம் போன்ற கன உலோகங்களை, அவசியமில்லாத தாதுக்களையும் நீக்கி சுத்தமான நீராக்கலாம் என்று என் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளேன்.
நாம் குடிக்கும் நீரில் NTU (nephelometric turbidity unit) அளவு (நச்சுத் தன்மை அளவு) 1 ‡NTU மட்டுமே இருக்க வேண்டும். பயன்படுத்தவே முடியாமல் இருக்கும் கலங்கல் நீரை இயற்கை முறையில் சுத்தம் செய்ய 3 முறைகளை ஆய்வு செய்துள்ளேன். முதல் முறையில், ஒரு லிட்டர் நீரில் ஒரு மி.கிராம் சோடியம் குளோரைடு கலவையை சேர்த்து, அதில் இந்த விதைகளைப் பொடி செய்து போட வேண்டும். 10 நிமிடங்கள் ஊறியவுடன் அடியில் தேங்கி உள்ள கலவையை (extract)  200 மில்லி நீருக்கு 0.5 கிராம் என்ற அளவில் போட்டு, 12 மணி நேரம் வைக்க வேண்டும். இதில் முருங்கை விதை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் மற்றும் வேதிப் பொருட்கள் அழிகின்றன. தேத்தாங்கொட்டை கன உலோகங்களைப் பிரிக்கும். அவரை விதை, நீரின் கலங்கல் தன்மையை நீக்கும்.
இன்னொரு முறையில் சோடியம் குளோரைடைப் பயன்படுத்தாமல், விதைகளின் பொடியை நேரடியாக கலங்கல் நீரில் போட்டுப் பார்த்ததில், 12 மணி நேரத்தில் நீர் மொத்தமும் சுத்தமாகியது. 3-ஆவது முறையில் சோதனைக் கூடத்தில் இருக்கும் டிஸ்டில்டு வாட்டரில் விதைப் பொடியைப் போட்டு, 10 நிமிடங்களில் அந்தக் கலவையை எடுத்து நீரில் போட்டுப் பார்த்தேன். இந்த 3 முறைகளுமே நீரின் கலங்கல் தன்மையை நீக்கி, பயன்படுத்தத் தகுந்த நீராக மாற்றுகிறது என்றாலும் சோடியம் குளோரைடைப் பயன்படுத்திய நீர் அதிகபட்சமாக 98 சதவிகிதம் சுத்தமானது. மற்றவை இதைவிட ஒன்று அல்லது 2 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருந்தது.
தற்போது நீரை சுத்திகரிக்க இருக்கும் ஓசோன் வாயுவைப் பயன்படுத்துதல், எதிர் சவ்வூடு பரவல் (reverse osmosis), வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற செயற்கை முறைகளைவிட நான் ஆய்வில் கண்டறிந்த இயற்கையான முறை மிகவும் பாதுகாப்பானது. தவிர, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி, கொசு உற்பத்திக்கு வழி செய்கிறது. இதனால், பல நோய்கள் உண்டாகின்றன. இயற்கை விதைகள் வேதிப் பொருட்களை உறிஞ்சிக் கொள்வதால், மண் மாசடைவதும் தடுக்கப்படுகிறது.
என்னுடைய இந்த ஆய்வுக் கட்டுரை, ‘ஜர்னல் ஆஃப் இன்டஸ்ட்ரீயல் என்ஜினீயரிங் கெமிஸ்ட்ரி’ என்ற சர்வதேச இதழில் விரைவில் வெளிவர உள்ளது” என்கிறார் சசிகலா.
கலக்குங்க மேடம்!

Advertisements

2 thoughts on “நல்ல தண்ணீர் வேண்டுமா ? – கவர் ஸ்டோரி – PUTHIYA THALAIMURAI NEWS

  1. Any Technical Explanation available for this? This has been in practise for so long in the districts of Ramnad, Sivagangai, Virudhunagar, etc

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s